உள்ளூர் செய்திகள்

குட்கா விற்றவர் கைது

சின்னசேலம் : சின்னசேலம் பகுதியில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர். சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் சேலம் மெயின் ரோட்டில் குரால் பிரிவு சாலை அருகே உள்ள கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையில் 15 பாக்கெட் குட்கா வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து கடை உரிமையாளரான பெரம்பலுார் மாவட்டம், பசும்பலுார் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் பெரியசாமி, 44; என்பவரை கைது செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை