மேலும் செய்திகள்
2 கிலோ குட்கா பறிமுதல்
10-Mar-2025
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.மூங்கில்துறைப்பட்டு பகுதியில் நேற்று சப் இன்ஸ்பெக்டர் சிவன்யா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கடை உரிமையாளர் சுப்பிரமணியன் மகன் மணிகண்டன், 49;என்பவரை கைது செய்தனர்.அதேபோல, சவேரியார்பாளையத்தில், சவரிமுத்து மனைவி சாரல் மேரி 49, என்பவர் மது பாட்டில் விற்று வந்தார். அவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
10-Mar-2025