மேலும் செய்திகள்
குட்கா விற்ற 2 பேர் கைது
08-Dec-2024
விருத்தாசலம்; விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் - கடலுார் சாலை, புதுக்கூரைப்பேட்டை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த பைக்கை சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்திச் சென்றது தெரிய வந்தது.பைக்கில் வந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் விருத்தாசலம் மணலுார் பகுதியை சேர்ந்த சங்கர், 45, என்பதும், விருத்தாசலம் பகுதியில் உள்ள பெட்டி கடைகளுக்கு குட்கா பொருட்களை மொத்த விற்பனை செய்தது தெரிந்தது.போலீசார் வழக்குப் பதிந்து, சங்கரை கைது செய்தனர்.
08-Dec-2024