உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குட்கா விற்பனை வியாபாரி கைது

குட்கா விற்பனை வியாபாரி கைது

கள்ளக்குறிச்சி : நீலமங்கலத்தில் பெட்டி கடையில் குட்கா பாக்கெட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நீலமங்கலத்தை சேர்ந்த வீரண்ணன் மகன் பேரரசன்,48; தனது பெட்டி கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, பேரரசனை கைது செய்து, கடையில் இருந்த ரூ.3,360 மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகள் மற்றும் 700 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி