ராஜூ மருத்துவமனையில் முடி மாற்று அறுவை சிகிச்சை
கள்ளக்குறிச்சி::கள்ளக்குறிச்சி, ராஜூ மருத்துவமனையில் முடி மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவ நிபுணர்கள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.கள்ளக்குறிச்சி, சுந்தர விநாயகர் கோவில் தெருவில், ராஜூ இருதயம், தோல் மருத்துவமனை உள்ளது. இங்கு தலை வழுக்கைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் முடி மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.மருத்துவமனை முதன்மை தோல் சிகிச்சை நிபுணர் இந்துபாலா மற்றும் பெர்ல் ஹெல்த் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் சசிகுமார் தலைமையிலான குழுவினர், மருத்துவமனை மையத்திலேயே முடிமாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.இதுகுறித்து டாக்டர் இந்துபாலா கூறியதாவது :மருத்துவமனையில் அதிநவீன உயர்தர அறுவை சிகிச்சை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரு நகரங்களில் மட்டும் செய்யக்கூடிய முடி மாற்று அறுவை சிகிச்சை, மார்பக வளர்ச்சி சிகிச்சை, கொழுப்பு குறைக்கும் லைபோசக்சன் சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படுகின்றன.குறைந்த கட்டணத்தில், அதி நவீன சிகிச்சைகளும், தொடர் கண்காணிப்பும் எங்களின் மருத்துவக்குழுவினரால் வழங்கப்படுகிறது. தற்போது மாவட்டத்தில் முதலாவதாக முடி மாற்று அறுவை சிகிச்சை இங்கு வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.