உள்ளூர் செய்திகள்

ஹான்ஸ் விற்றவர் கைது

கள்ளக்குறிச்சி : சிறுவங்கூரில் ஹான்ஸ் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிறுவங்கூரை சேர்ந்த சண்முகம்,67; என்பவர் தனது பெட்டி கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, சண்முகத்தை கைது செய்து, அவரிடமிருந்த ரூ.660 மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை