மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு பயிற்சி
06-Sep-2024
கள்ளக்குறிச்சி : வாணாபுரம் அடுத்த எடுத்தனுார் கிராமத்தில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் பயிர் அறுவடை ஆய்வு தரவுகளை செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்த களப்பணி பயிற்சி நடந்தது.கோட்ட புள்ளியியல் உதவி இயக்குநர் செல்வராஜ் தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குநர் ஷியாம்சுந்தர், வேளாண் அலுவலர் புஷ்பவள்ளி, வி.ஏ.ஓ., காண்டீபன் முன்னிலை வகித்தனர். பொதுப்பயிர் மதிப்பீட்டாய்வு திட்டத்தின் மூலம் பயிர் அறுவடை ஆய்வு தரவுகளை ஜி.சி.இ.எஸ்., செயலியில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக களபணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
06-Sep-2024