உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தலைமை ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

தலைமை ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

கள்ளக்குறிச்சி : மாணவர்கள் பிரச்னைக்கு தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர்.கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் மாணவர்கள் செய்யும் பிரச்னைகளுக்கு தலைமை ஆசிரியர்கள் தண்டிக்கப்படுவதை கண்டிக்கும் விதமாக கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் மணிமாறன், செயலாளர் கலாநிதி, பொருளாளர் அன்பழகன் ஆகியோர் உட்பட மொத்தம் 50க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர். மாணவர்கள் செய்யும் பிரச்னைகள் அனைத்திற்கும் ஒட்டுமொத்தமாக தலைமை ஆசிரியர்களை குறிவைத்து பணியிட மாற்றம், பணியிடை நீக்கம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இதனை தவிர்க்கும் விதமாக கல்வித்துறைக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இதனை அரசு கவனத்தில் கொள்ளும் வகையில் தலைமை ஆசிரியர்கள் நேற்று ஒரு நாள் மட்டும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ