மேலும் செய்திகள்
மலை உச்சியில் தீபம் ஹிந்து முன்னணி மனு
16-Nov-2026
கள்ளக்குறிச்சி: கார்த்திகை தீப திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து இந்து முன்னணியின் இனிப்பு வழங்கி கொண்டாடினர். கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில், நீதிமன்ற உத்தரவை வரவேற்றும், நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்தும், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மதன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், ஒன்றிய இணையதள பொறுப்பாளர் சின்னதுரை வரவேற்பு மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
16-Nov-2026