உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீடு புகுந்து நகை திருட்டு எஸ்.ஒகையூரில் துணிகரம்

வீடு புகுந்து நகை திருட்டு எஸ்.ஒகையூரில் துணிகரம்

கள்ளக்குறிச்சி: எஸ்.ஒகையூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 2 சவரன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த எஸ்.ஒகையூர் கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் மகன் செம்மலை, 58; விவசாயி. இவருக்கு அதே பகுதியில் 2 வீடுகள் உள்ளது. கடந்த 25ம் தேதி இரவு காட்டுகொட்டகை பகுதியில் உள்ள வீட்டை பூட்டி விட்டு, செம்மலையும் அவரது மனைவி விருத்தாம்பாளும் மற்றொரு வீட்டில் துாங்கினர். நேற்று காலை பூட்டிய வீட்டிற்கு சென்ற போது, கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவை உடைத்து, அதிலிருந்த 2 சவரன் தங்க செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து செம்மலை அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை