உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கணவன் மாயம்: மனைவி புகார்

கணவன் மாயம்: மனைவி புகார்

கள்ளக்குறிச்சி; கூத்தக்குடியில் மாயமான கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி அடுத்த கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் மகன் பச்சமுத்து, 32; டிரைவர். இவர், கடந்த 27ம் தேதி டிரைவிங் வேலைக்காக பொள்ளாச்சி செல்வதாக தகவல் தெரிவித்து சென்றார். நீண்ட நேரமாகியும் பச்சமுத்து மொபைல்போன் எடுக்காததால் சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து விசாரித்த போது பச்சமுத்து பொள்ளாச்சிக்கு செல்லவில்லை என தெரிந்தது. சில மணி நேரத்தில் பச்சமுத்து மொபைல்போன் சுவிட்ச் ஆப் ஆனது. மாயமான தனது கணவரை கண்டுபிடித்து தர கோரி அவரது மனைவி நீலாவதி அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி