சுதந்திர தின விழா ஏற்பாடு : கலெக்டர் ஆலோசனை
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், வரும் ஆக.15ம் தேதி சுதந்திர கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். விழாவில் போலீஸ் அணிவகுப்பு, பாதுகாப்புப் பணிகள், தீத்தடுப்பு முன்னேற்பாடுகள், பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் குறித்தும், அனைத்துத் துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்ககுதல் தொடர்பாகவும் ஆலோசனை நடந்தது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்த்குமார்சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.