ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி மண்டல இணைப்பதிவாளர் ஆய்வு
கள்ளக்குறிச்சி: பள்ளிப்பட்டு கிராமத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் பணியை மண்டல இணைப்பதிவாளர் ஆய்வு செய்தார். முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயது மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படு கிறது. இத்திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 28,133 பேர் பயன்பெறுகின்றனர். நடப்பு மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் கடந்த 2 நாட்களாக வழங்கப்பட்டது. ரேஷன்கடை விற்பனையாளர்கள் வாகனங்களில் ரேஷன் பொருட்களை ஏற்றி சென்று பயனாளிகளின் வீட் டில் வழங்கி வருகின்றனர். ரிஷிவந்தியம் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணியினை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் ஆய்வு செய்தார். சரியான எடையில் பொருட்கள் வழங்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், வேளானந்தல், பல்லகச்சேரி, கடம்பூர், மரூர்புதுார், பெரியபகண்டை ஆகிய கிராமங்களிலும் ஆய்வு நடந்தது.