இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக எழுமலை பொறுப்பேற்றார். கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த நந்தகுமார் கடலுார் மாவட்டம், காடாம்புலியூர் காவல்நிலையத்திற்கு பணிமாறுதல் பெற்று சென்றார்.கள்ளக்குறிச்சி கலால் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஏழுமலை கச்சிராயபாளையம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர், நேற்று காலை கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் பொறுப்பேற்று கொண்டார்.