உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; வரும் செப்., மற்றும் அக்., மாதங்களில் மாவட்டம், மண்டலம் மற்றும் மாநில அளவில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53 வகைகளில் நடத்தப்படும். இதில் கலந்து கொள்ள https://sdat.tn.gov.inஎன்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். தனிநபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். குழுபோட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். நான்காமிடம் பெறுபவர்களுக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது. போட்டியில் வழங்கப்படும் சான்றிதழ் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகள் பெறலாம். பள்ளி மாணவர்கள் 12 முதல் 19 வயதினரும், கல்லுாரி மாணவர்கள் 17 முதல் 25 வயதும், பொதுப்பிரிவினர் 15 வயது முதல் 35 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பு கிடையாது. மேலும் விபரங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 74017 03474 என்ற மொபைல் எண்ணிலும், 'ஆடுகளம்' தகவல் தொடர்பு மையத்தை 95140 00777 என்ற எண்ணில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி