உள்ளூர் செய்திகள்

பேட்டிகள்....

தனியார் பள்ளியை மிஞ்சிய பள்ளி

இப்பள்ளி தனியார் பள்ளியை மிஞ்சும் அளவிற்கு பள்ளியில் 'ஸ்மார்ட் போர்டு' வகுப்பறை, உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகங்கள், ஏராளமான புத்தகங்களை கொண்ட நுாலகம் உள்ளது. தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டு முயற்சியால் குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி ஒரு நந்தவனமாக உள்ளது. தமிழக முதல்வரின் நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தால் இப்பள்ளி மாணவர்கள் பலர் கல்லுாரி படிப்பில் சேர்ந்துள்ளனர்.-சத்தியமூர்த்தி, ஒன்றிய சேர்மன், சின்னசேலம்

திறனாய்வு தேர்வுகளில் தேர்ச்சி

இப்பள்ளியில், குதிரைச்சந்தல் மட்டுமின்றி அருகில் உள்ள நல்லாத்துார், மட்டிகைக்குறிச்சி, காரனுார், சடையம்பட்டு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களும் ஆர்வமுடன் பயின்று வருகின்றனர். அரசு திறனாய்வு தேர்வுகளுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. திறனறி தேர்வுகளிலும் மாணவர்கள் பலர் தேர்ச்சியடைந்து ஊக்கத்தொகை பெறுகின்றனர். இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் பொறியியல், மருத்துவம் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். சிலர், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் உட்பட பல்வேறு அரசு பணிகளில் பணிபுரிகின்றனர்.-மணிமாறன், பள்ளி தலைமை ஆசிரியர், குதிரைச்சந்தல்

அரசு நலத்திட்டங்களால் மகிழ்ச்சி

குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியின் சுற்றுசூழல் இயற்கை எழில் கொஞ்சும் வகையிலும், கல்வியிலும் சிறந்து விளங்குகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் சிறந்த கல்வியுடன், விளையாட்டு, தேசிய பசுமைப்படை போன்ற பல்வேறு பயிற்சிகளை பெறுகின்றனர். தமிழக அரசு வழங்கும் புத்தகம், சீருடை, மிதிவண்டி, மதிய உணவு உட்பட அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தலைமை ஆசிரியர், ஊராட்சி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பள்ளி சிறந்து விளங்குகிறது.-அனு செல்லப்பிள்ளை, ஊராட்சி தலைவர், குதிரைச்சந்தல்

முன்னேற்றமே தாரக மந்திரம்

இப்பள்ளி ஒவ்வொரு கல்வியாண்டிலும் புதிய சாதனை படைத்து வருகிறது. கடந்த 2023-24ம் கல்வியாண்டை ஒப்பிடுகையில், 2024-2025 கல்வியாண்டில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. ஆசிரியர்களின் சிறப்பான செயல்பாட்டினால், பள்ளி காமராஜர் விருதுக்கு தேர்வாகி 1 லட்சம் ரூபாய் பரிசு பெற்றிருப்பது ஊருக்கே பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது. மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் தேர்ச்சியாகி இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பால் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி முன்னேற்ற பாதையில் செல்கிறது.-பூவாயி சக்திவேல், பள்ளி மேலாண்மை குழு தலைவர், குதிரைச்சந்தல்தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரின் பல்வேறு திட்டங்களால் இப்பள்ளி சிறந்த பள்ளியாக திகழ்கிறது. பள்ளியில் படித்த முன்னாள் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன். இங்கு பணிபுரியும் ஆசிரியர்களும், மாணவர்களும் மற்ற பள்ளிகளுக்கு எடுத்துக்காட்டாக செயல்பட்டு வருகின்றனர். நான் படித்த பள்ளியிலேயே தற்போது பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனது சார்பில் பள்ளிக்கு கண்காணிப்பு கேமரா மற்றும் நடைபாதை பூங்கா அமைத்து கொடுத்துள்ளேன். பள்ளி மேன்மேலும் சிறந்து விளங்க என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்வேன்.-அறிவழகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், குதிரைச்சந்தல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி