தற்காப்பு கலை பயிற்சி சான்றிதழ் வழங்கல்
தியாகதுருகம்: தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு பயிற்சிக்கான சான்றிதழ்களை கலெக்டர் பிரசாந்த் வழங்கினார்.கள்ளக்குறிச்சி மாவட்ட அரசுப் பள்ளி மாணவிகளுக்கு 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டத்தின்கீழ் தற்காப்புக் கலைப் பயிற்சி அளிக்கப்பட்டது. தியாகதுருகம், ரிஷிவந்தியம், மணலுார்பேட்டை, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், சின்ன சேலம், கல்வராயன்மலை, சங்கராபுரம் ஆகிய வட்டார அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 600 மாணவிகளுக்கு கடந்த அக்டோபர் 23 முதல் 28ம் தேதி வரை தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிறைவு விழாவில் தற்காப்புக்கலை பயிற்சி பெற்றவர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்தி உள்ளிட்ட பள்ளிக்கல்வித் துறை, சமூக நலத்துறை, அரசு உயர் அலுவலர்கள், ஆசிரியர்கள், தற்காப்புக் கலைப்பயிற்சியாளர்கள், பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.