| ADDED : ஜூன் 07, 2024 06:24 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் 121 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜன., முதல் தடைபட்டு வந்த இந்த மருத்துவ முகாம், 5 மாத இடைவெளிக்குப்பிறகு நேற்று கள்ளக்குறிச்சி சிறுவங்கூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடந்தது. முகாமிற்கு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். டாக்டர்கள், ஜீவா (எலும்பு முறிவு), பாக்யராஜ் (மனநலம்), வாசுவி (காது, மூக்கு, தொண்டை), காயத்ரி (கண்), பிரபாகரன் (முடநீக்கியல்) ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். 40 சதவீதம் அல்லது அதற்குமேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்கப்பட்டது. முகாமில் பங்கேற்ற 121 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து அனைவருக்கும் மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.