உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆன்லைன் டிரேடிங் தகவலை நம்பி ரூ.27 லட்சம் இழந்த ஐ.டி., ஊழியர் சைபர் கிரைம் மோசடி கும்பல் அட்டகாசம்

ஆன்லைன் டிரேடிங் தகவலை நம்பி ரூ.27 லட்சம் இழந்த ஐ.டி., ஊழியர் சைபர் கிரைம் மோசடி கும்பல் அட்டகாசம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வாட்ஸ்ஆப்பில் வந்த 'ஆன்லைன் டிரேடிங்' தகவலை நம்பி ரூ. 27 லட்சத்தை செலுத்திய ஐ.டி., ஊழியர் ஏமாற்றமடைந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு புதிய மொபைல் எண்ணில் இருந்து ஆன்லைன் டிரேடிங் தொடர்பாக செய்தியும், லிங்கும் வந்தது. ஆன்லைன் டிரேடிங் தொடர்பாக பல்வேறு செய்திகளை கேட்டறிந்த ஐ.டி.,ஊழியர் இதை உண்மை என நம்பி லிங்க் மூலமாக முதலில் ரூ.10 ஆயிரத்தை செலுத்தினார். இதன் மூலம் குறிப்பிட்ட தொகை லாபமாக கிடைத்ததால் ஐ.டி.,ஊழியருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. தொடர்ந்து, மர்ம நபர்கள் பல்வேறு லிங்குகளை அனுப்பி இதில் முதலீடு செய்யுமாறு தெரிவித்தனர். ஊழியர் தனது சொந்த பணத்தையும், நகைகளை அடகு வைத்து அதன் மூல கிடைக்க பணம், நண்பர்களிடமிருந்து கடனாக பெற்றும் 27 லட்சத்து 80 ஆயிரத்து 50 ரூபாயை பல்வேறு வங்கி கணக்கு மூலம் அனுப்பினார். இந்நிலையில் ஐ.டி., ஊழியரின் ஆன்லைன் வாலட்டில், ரூ.1.44 கோடி பணம் இருப்பதாக காண்பித்தது. இந்த பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சித்த போது, 10 சதவீதம் கமிஷன் தொகை செலுத்துமாறு மர்ம நபர்கள் தெரிவித்தனர். விசாரித்த போது சைபர் கிரைம் மோசடி கும்பல் என தெரியவந்தது. இது தொடர்பாக ஆன்லைன் மூலமாக புகார் அளித்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !