கட்டட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் திருட்டு
தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே கட்டட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி மகன் சண்முகம், 40; கட்டட மேஸ்திரி. இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூரூவில் தங்கி வேலை செய்து வருகிறார். நேற்று காலை பெரியமாம்பட்டு வந்த அவர் வீட்டிற்கு சென்ற போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைத்து, அதிலிருந்த 5 சவரன் நகை மற்றும் ரூ. 1.5 லட்சம் பணம் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து சண்முகம் கொடுத்த புகாரின்படி தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து நகை, பணம் திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.