உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாஜி ஊராட்சி தலைவர் மனைவியிடம் நகை பறிப்பு

மாஜி ஊராட்சி தலைவர் மனைவியிடம் நகை பறிப்பு

விருத்தாசலம்: கடலுார் மாவட்டம்,விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் ராமதாஸ். இவரது மனைவி சுந்தரி, 50; இவர் நேற்று முன்தினம் இரவு வராண்டாவில் துாங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு 2:15 மணியளவில், வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், சுந்தரியின் கழுத்தில் கத்தியை வைத்து, செயினை பறிக்க முயன்றுள்ளார். திடீரென கண் விழித்த சுந்தரி கூச்சலிடவே மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில், கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. மாடியில் துாங்கிக்கொண்டிருந்த மகன் மற்றும் உறவினர்கள் வந்து பார்த்தபோது, சுந்தரி காதில் அணிந்திருந்த 1 சவரன் தோடு, கொலுசு ஆகியன திருடுபோனது தெரிந்தது. இதுபற்றி தகவலறிந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை