மேலும் செய்திகள்
பாலிடெக்னிக் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா
13-Jan-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த வேலைவாய்ப்பு நேர்க்காணலில் 67 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி தாளாளர் ரஹமதுல்லா தலைமை தாங்கினார். கல்லுாரி தலைவர் ஜெகநாதன், செயலாளர் அல்லாபக் ஷ் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் பாஸ்கர் வரவேற்றார். சென்னை ரானே பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனிதவள மேலாண்மை அலுவலர் அஸ்வின்குமார் மாணவர்களிடம் நேர்க்காணல் நடத்தினார்.இயந்திரவியல், ஆட்டோமொபைல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைகளை சேர்ந்த 135 மாணவர்களிடம் நேர்க்காணல் நடத்தப்பட்டது. அதில், தேர்ச்சி பெற்ற 67 மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு, தங்கும் விடுதி வசதியுடன் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.நிகழ்ச்சியில் துறைத்தலைவர்கள் விஜயராஜ், ராதாகிருஷ்ணன், சிரஞ்சீவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.கல்லுாரி துணை முதல்வர் முகமதுசபீக் நன்றி கூறினார்.
13-Jan-2025