மேலும் செய்திகள்
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
25-Jan-2025
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., பள்ளி மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கள்ளக்குறிச்சி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். துணை முதல்வர் பாபு, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் இளையராஜா முன்னிலை வகித்தனர். ஏ.டி.எஸ்.பி., சரவணன் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி ெஹல்மெட் அணிந்து பைக்கும், சீட் பெல்ட் அணிந்து காரும் ஓட்ட வேண்டும், செல்போன் பேசிக்கொண்டும், மது அருந்தியும் வாகனம் ஓட்டக்கூடாது உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, நான்கு முனை சந்திப்பு பகுதி வரை மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, அவ்வழியாக ெஹல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்புகள், 'ஸ்மைலி பேட்ஜ்'களை வழங்கினர்.
25-Jan-2025