மேலும் செய்திகள்
தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
26-Aug-2025
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி ஏமப்பேர் ரவுண்டானா அருகே ரூ.46.30 கோடி மதிப்பில் புதிய புறநகர் பஸ் நிலையம் மற்றும் குடிநீர் அபிவிருத்தி பணிகள், தினசரி நாளங்காடி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்து பணிமனை மூலம் வெளியூர், கிராமப் புறங்களுக்கு 200க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் தனியார் பஸ்களும் அதிகளவில் இயக்கப்படுகிறது. இங்கிருந்து நாள்தோறும் 5,000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் நகரை கடந்து செல்கின்றன. பஸ் நிலையம் நான்கு முனை சந்திப்பையொட்டி அமைந்துள்ளதால், பஸ்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் இடங்கள் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறுகிய பஸ் நிலையம் என்பதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. கடந்த 2019ம் ஆண்டு முதல் கள்ளக்குறிச்சி மாவட்டமாக செயல்படுகிறது. இதனால் பல்வேறு மாவட்ட அரசு அலுவலகங்கள் மாவட்ட தலைநகரில் செயல்படும் நிலையில் பொதுமக்களின் வருகை அதிகரித்துள்ளன. பொதுமக்கள் மற்றும் வாகன பெருக்கத்திற்கேற்ப பஸ் நிலையம், சாலை வசதியின்மையால் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த முடியாத நிலை நீடிக்கிறது. நகரின் நான்கு முக்கிய சாலையிலும் போக்குவரத்து பாதிப் பு தொடர்கதையாக இருக்கிறது. அவசர ஆம்புலன்ஸ்கள், மாவட்ட அரசு உயர் அதிகாரிகளின் வாகனங்களும் தற்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றன. பொங்கல், தீபாவளி மற்றும் விேஷச நாட்களில் வழக்கத்தை விட அதிகமாக காணப்படும். இந்நிலையில் தற்போதை பஸ் நிலையத்தை டவுன் பஸ் நிலை யமாக மாற்றி, வெளியூர் செல்லும் பஸ்களுக்கு என்று நகரின் வெளிப்புறத்தில் புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தன. இதனையடுத்து, ஏமப்பேர் ரவுண்டானா தேசிய நெடுஞ்சாலை அருகே தனிநபர் தானமாக வழங்கிய 5 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் புதிய புறநகர் பஸ் நிலையம் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவ்விடத்தில் ரூ.46.30 கோடி மதிப்பில் புதிய புறநகர் பஸ் நிலையம், குடிநீர் அபிவிருத்தி பணிகள் மற்றும் தினசரி நாளங்காடி என நவீன வசதிகளுடன் கூடிய வகையில் அமைக்கும் பொருட்டு அமைச்சர் வேலு , எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் கடந்த ஜூன் 28 ம் தேதி அடிக்கல் நாட்டினர். தொடர்ந்து பஸ் நிலையத்திற்கான அடித்தளம் அமைப்பதற்காக சுற்றிலும் சுவர் எழுப்பி கிராவல் மண்கள் கொட்டி நிரப்பி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. புதிய புறநகர் பஸ் நிலையத்தில் இடநெருக்கடி இன்றி 50க்கும் மேற்பட்ட பஸ்கள் நிற்கும் வகையில் அமைக்கப்படுகிறது. கலெக்டர் பிரசாந்த், நகராட்சி கமிஷனர் சரவணன் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் பஸ் நிலைய கட்டுமான பணிகளை அவ்வப்போது மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
26-Aug-2025