பெருமாள் கோவிலில் கேதார கவுரி நோன்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் பெண்கள் கேதார கவுரி நோன்பு வழிபாடு செய்தனர். கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நேற்று பெண்கள் கேதார கவுரி பூஜை செய்தனர். பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலின் ஆண்டாள் மண்டபத்தில் கவுரி தேவதையை ஆவாஹனம் செய்து வழிபாடு நடந்தது. இதில் பெண்கள் பங்கேற்று கேதார கவுரி நோம்பு வழிபாடு செய்தனர். நேற்று காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை நடந்த இந்த வழிபாட்டில் ஏராளமானோர் குடும்பத்துடன் பங்கேற்று தரிசனம் செய்தனர்.