உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுார் கோவில்களில் கேதார கவுரி நோன்பு வழிபாடு

திருக்கோவிலுார் கோவில்களில் கேதார கவுரி நோன்பு வழிபாடு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஏராளமான பக்தர்கள் கோவில்களுக்கு சென்று கேதார கவுரி நோன்பு எடுத்து வழிபாடு செய்தனர். தீபாவளிக்கு அடுத்த வரும் அமாவாசை தினத்தில் ஐஸ்வரியம் தரும் கேதார கவுரி விரதம் இருப்பது வழக்கம். அந்த வகையில் திருக்கோவிலுாரில் தீபாவளி நோன்பு எடுக்கும் வழக்கம் உள்ள பக்தர்கள் நேற்று முன்தினம் காலை முதல் விரதமிருந்து விரட்டானேஸ்வரர், உலகளந்த பெருமாள் கோவில் மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகளுக்கு அருகாமையில் உள்ள கோவில்களுக்கு சென்று கேதார கவுரியை வழிபட்டு நோன்பு எடுத்தனர். அமாவாசை நோன்பு எடுக்கும் பக்தர்கள் நேற்று காலை முதல் விரதம் இருந்து குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று நோன்பு எடுத்தனர். இதனால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை