உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோலமாவு வியாபாரி சாலை விபத்தில் பலி

கோலமாவு வியாபாரி சாலை விபத்தில் பலி

உளுந்துார்பேட்டை : உளுந்தாண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ், 65. கோலமாவு வியாபாரி. இவர் நேற்று காலை 4.30 மணிக்கு, உளுந்தூர்பேட்டை அடுத்த வெள்ளையூர் அருகில், சேலம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் அவரது சைக்கிள் மீது மோதியது. இதில் செல்வராஜ், சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ