இளங்காளியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்
ரிஷிவந்தியம் : வாணாபுரம் அருகே, இளங்காளியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வாணாபுரம் அடுத்த அத்தியூர் கிராமத்தில் பழமை வாய்ந்த இளங்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த 1ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சக்தி அழைத்தல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த 4ம் தேதி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து பூஜை, பிரவேச பலி, லட்சுமி மற்றும் நவகிரக ேஹாமங்கள், 5ம் தேதி கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, தம்பதி பூஜை, சுமங்கலி பூஜை, மகா பூர்ணாகுதி உள்ளிட்டவை நடைபெற்றன.நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிேஷகங்களை தொடர்ந்து, காலை 8:00 மணிக்கு, கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.