உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தொழிலாளர் சங்க ஆண்டு விழா

தொழிலாளர் சங்க ஆண்டு விழா

திருக்கோவிலுார்,: அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில், தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனை கூட எடை பணியாளர் தொழிலாளர் சங்கத்தின், 17ம் ஆண்டு கிளை துவக்க விழா, கமிட்டி வளாகத்தில் நடந்தது.சங்கத் தலைவர் பழனி தலைமை தாங்கினார். செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் முருகன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சரவணன் சங்க கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். மாநில துணைச்செயலாளர் பாக்கியநாதன், மாநில பொருளாளர் கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பேசினர். பணி நிரந்தரம், மருத்துவக்காப்பீடு, வாரிசுகளுக்கு பணி என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை