உள்ளூர் செய்திகள்

லட்சார்ச்சனை வழிபாடு

சங்கராபுரம் : பெருமணம் பெரியாண்டவர் கோவிலில் லட்சார்ச்சனை வழிபாடு நடந்தது. சங்கராபுரம் அடுத்த பெருமணம் கிராமத்தில் பூர்ண புஷ்கலாம்பாள் சமேத பெரியாண்டவர் கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் லட்சார்ச்சனை வழிபாடு நேற்று நடந்தது. முன்னதாக பூர்ண புஷ்கலாம்பாள் சமேத பெரியாண்டவர் மற்றும் சப்த கன்னிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மகா தீபாராதனைகளுக்கு பின் 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பெருமணம் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி