மேலும் செய்திகள்
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
20-Dec-2024
கள்ளக்குறிச்சி; தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த, ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார். இணை செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். துணை தலைவர் தேவராஜன் வரவேற்றார்.மாநில துணை தலைவர் செந்தில்முருகன் துவக்கவுரையாற்றினர். மாவட்ட செயலாளர் இந்திரகுமார் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். மாவட்ட செயலாளர்கள் ரவி, சாமிதுரை, வட்டச் செயலாளர் குமாரதேவன்் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணை பொதுச் செயலாளர் மகாலிங்கம் சிறப்புரையாற்றினர். இதில் களப்பணியாளர்கள் செய்யும் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்க வேண்டும். ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களை கடுமையாக நடத்தப்படுவதை கைவிட வேண்டும். உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தினர்.
20-Dec-2024