உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தொழுநோய் கண்டறியும் முகாம்

தொழுநோய் கண்டறியும் முகாம்

உளுந்துார்பேட்டை; உளுநதுார்பேட்டை கிராமங்களில் தொழு நோய் கண்டறியும் பணிகளில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உளுந்துார்பேட்டை வட்டார சுகாதார அளவில் 110 கிராமங்களில் தொழு நோய் கண்டறியும் முகாம் நடக்கிறது. கடந்த 13ம் தேதி துவங்கி வரும் 28ம் தேதி வரை நடக்கும் முகாமில் மேற்பார்வையாளர்கள், 96 கிராம செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். முகாமை வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி ஆய்வு செய்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், மருத்துவர் மேற்பார்வையாளர் சையத் அப்பாஸ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை