மேலும் செய்திகள்
விழிப்புணர்வு முகாம்
24-Dec-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் 'சமத்துவம் காண்போம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி நிறைவு விழா நடந்தது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தாமரைமணாளன் தலைமை தாங்கினார். ஏ.கே.டி., கல்வியியல் கல்லுாரி முதல்வர் பருவதஅரசு வரவேற்றார். பழங்குடியினர் நலத்துறை திட்ட அலுவலர் அம்பேத்கர் வாழ்த்துரை வழங்கினார். சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பு அலுவலர் பச்சையப்பன் சிறப்புரையாற்றினார். சமூக நீதி மற்றும் சமத்துவ மையம், சமூக பணி கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் பிரியசித்ரா இத்திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். 'சமத்துவம் காண்போம்' திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு இளம் பருவத்தில் சமூக சமத்துவம், மனித உரிமைகள் மற்றும் பாகுபாடு ஒழிப்பு குறித்த கருத்துகள் விளக்கி கூறப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் அரசு பள்ளிகளில் பொம்மலாட்டம் மற்றும் நாடக நிகழ்ச்சி மூலம் சமூக கருத்துகள் விளக்கி கூறப்பட்டன. சமூகநீதி மற்றும் சமத்துவ மைய ஊடக ஆலோசகர் நித்யா பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.
24-Dec-2025