தேவபாண்டலத்தில் நுாலக வார விழா
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிளை நுலகம் சார்பில் நுாலக வார விழா தாகூர் பள்ளியில் நடந்தது. பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட நிர்வாகிகள் வேலு, அண்ணாமலை, தங்கராஜ், அறிவுடைநம்பி, ராஜா முன்னிலை வகித்தனர். முருக குமார், ராதா, அன்பழகன் வாழ்த்திப் பேசினர். விழாவில் 7 நுாலக புரவலர்கள், 50 புதிய உறுப்பினர்கள் இணைந்தனர். விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வாசகர் வட்ட துணைச் செயலாளர் இனாயதுல்லா விழாவை தொகுத்து வழங்கினார். நுாலகர் மலர்கொடி நன்றி கூறினார்.