வட பொன்பரப்பி ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த வட பொன்பரப்பி ஊராட்சி அலுவலக கட்டடத்தை அதிகாரிகள் பூட்டியதால் பரபரப்பு நிலவியது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த வட பொன்பரப்பி ஊராட்சி அலுவலகம் கடந்த 2ம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் பூட்டப்பட்டது. அதன் பின் இதுவரை திறக்கப்படவில்லை. ஊராட்சி செயலாளர் மருத்துவ விடுப்பில் இருக்கும் நிலையில், அவருக்கு பதிலாக ஊராட்சி செயலாளர் இதுவரை நியமிக்கப்படவில்லை. ஊராட்சியில் குடிநீர், தெரு விளக்கு போன்ற அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய ஊராட்சி நிர்வாகம் முறையாக இயங்காததால் பொதுமக்கள் அல்லாடி வருகின்றனர். ஊராட்சி அலுவலகத்தை திறக்கவும், ஊராட்சி செயலாளரை நியமிக்கவும் வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.