மக்காச்சோள பயிர்கள் மழையால் சேதம்
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையத்தில், சேதமடைந்த மக்காச்சோள பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.கச்சிராயபாளையம் பகுதியில் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு நெல், வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த வாரம் அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் எடுத்தவாய்நத்தம், பரிகம், புதுக் குட்டை ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிர்கள் முழுதும் சாய்ந்து சேதமடைந்தன.கதிர்கள் முதிர்ச்சி அடையும் முன்பே காற்றில் சாய்ந்து சேதமானதால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அரசு சார்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.