உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வெளிநாட்டி வேலை எனக்கூறி ரூ.3.50 லட்சம் மோசடி செய்தவர் கைது

வெளிநாட்டி வேலை எனக்கூறி ரூ.3.50 லட்சம் மோசடி செய்தவர் கைது

உளுந்துார்பேட்டை: வேலைக்காக கொரியாவுக்கு அனுப்புவதாக கூறி சுற்றுலா விசாவில் அனுப்பி 3.50 லட்சம் ரூபாய் ஏமாற்றிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த சோயம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகன் சங்கர், 43; இவர் உளுந்தூர்பேட்டை அடுத்த சிறுத்தனூர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் கரோலின்வோஜிலாவிடம், 21; வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார். மேலும் டிப்ளமோ படித்து உள்ளதால் கொரியா நாட்டில் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும் என கூறி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3.50 லட்சம் ரூபாயை சங்கர் பெற்றுக் கொண்டார்.இதன் பின் அவர் கரோலின்வோஜிலாவை கொரியாவிற்கு அனுப்பியுள்ளார். அங்கு சென்ற பின்தான் சங்கர் சுற்றுலா விசாவில் அனுப்பி ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. இது குறித்து கரோலின்வோஜிலா கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து சங்கரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை