மேலும் செய்திகள்
800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
16-Aug-2025
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். உளுந்துார்பேட்டை அடுத்த எறையூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் டன் கணக்கில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி., அசோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் எறையூர் கிராமத்தில் சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனை நடத்தினர். அங்கு மூட்டை மூட்டையாக ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த கேம்பரியல் என்பவரை போலீசார் கைது செய்து, கள்ளக்குறிச்சி குடிமைபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
16-Aug-2025