மேலும் செய்திகள்
பறவையே எங்கு இருக்கிறாய் ?
05-Jan-2025
உளுந்தூர்பேட்டை: பறவைகளை வேட்டையாடிய நபரை போலீசார் கைது செய்தனர்.உளுந்தூர்பேட்டை அடுத்த சேந்தநாடு அருகே நாட்டு துப்பாக்கி கொண்டு பறவைகளை வேட்டையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.அங்கு நாட்டு துப்பாக்கியுடன் பறவைகளை வேட்டையாடிய உளுந்தூர்பேட்டை அடுத்த வானம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் மணிகண்டன், 34; என்பவரை திருநாவலூர் போலீசார் கைது செய்து, நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
05-Jan-2025