உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் கைது

பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் கைது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே பெண்ணை கட்டாயப்படுத்தி தகாத முறையில் நடக்க முயற்சித்தவரை போலீசார் கைது செய்தனர். சின்னசேலம் அடுத்த ராயப்பனுார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம் மகன் சுரேஷ்,35; இவர் கடந்த மே மாதம், 24 வயது பெண்ணை கட்டாயப்படுத்தி தகாத முறையில் நடந்துள்ளார். மேலும், கடந்த ஜூலை 12ம் தேதி மீண்டும் வலுகட்டாயமாக தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். இது குறித்து வெளியில் சொன்னால் பெண்ணின் கணவனை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் சுரேஷ்,35; கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !