உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக்கில் மது பாட்டில் கடத்தியவர் கைது

பைக்கில் மது பாட்டில் கடத்தியவர் கைது

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே பைக்கில் மது பாட்டில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அடுத்த மைலம்பாறையில், போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக, பைக்கில் வந்த நபரை மடக்கி சோதனை செய்தனர். அவர், கள்ள சந்தையில் விற்பனை செய்ய, மது பாட்டில்களை கடத்தி சென்றது கண்டறியப்பட்டது. போலீசார் விசாரணையில், மஞ்சபுத்துாரை சேர்ந்த வெங்கடேசன், 50; என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 25 குவார்ட்டர் பாட்டில்கள் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !