மேலும் செய்திகள்
குழந்தை இறப்பு
23-Dec-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே டூத் பேஸ்ட் என நினைத்து எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சி சேர்ந்த முத்தையன் மகன் வீரமுத்து, 40; இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சற்று மனநலம் பாதிப்புக்குள்ளான வீரமுத்து, கடந்த 12ம் தேதி காலை 6 மணிக்கு டூத் பேஸ்ட் என நினைத்து, எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து வீரமுத்துவை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு வீரமுத்து இறந்தார். இது குறித்து முத்தையன் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
23-Dec-2025