மேலும் செய்திகள்
மண்டல பூஜை பூர்த்தி விழா
12-Oct-2024
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை பூர்த்தி விழா நடந்தது.பாடல் பெற்ற சைவ ஸ்தலங்களில் சிறப்பு வாய்ந்ததும், அட்டவீரட்டானங்களில் ஒன்றான திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை விழா நடந்து வந்தது.இதன் நிறைவாக நேற்று காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மூல மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடந்தது. மூலவர் வீரட்டானேஸ்வரர் தங்கக் கவசத்தால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது.தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு தீபாராதனையும், சிறப்பு அலங்காரத்தில் வாணவேடிக்கையுடன் வீதியுலாவும் நடந்தது.
12-Oct-2024