உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மார்க்கெட் கமிட்டியில் 5 நாட்களில் ரூ.7.90 கோடி வர்த்தகம்

மார்க்கெட் கமிட்டியில் 5 நாட்களில் ரூ.7.90 கோடி வர்த்தகம்

திருக்கோவிலுார்: அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டியில், மழையிலும் எள் வரத்து அதிகரித்ததால், 5 நாட்களில் ரூ. 7.90 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில் அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி ஆண்டு முழுவதும் விளை பொருட்கள் ஏலத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு கடந்த வாரம் எள் வரத்து தினசரி ஆயிரம் மூட்டையை தாண்டி இருந்தது.கடந்த சில தினங்களாக, மழை நீடித்து வரும் நிலையில், கடும் சிரமங்களுக்கிடையே விவசாயிகள் எள்ளை அறுவடை செய்து, பதப்படுத்தி, பிரித்தெடுத்து ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.இந்தாண்டு அதிக பரப்பளவில் எள் பயிரிடப்பட்டிருந்தது. பயிர்கள் செழித்து வளர்ந்து இருந்தாலும், அறுவடை நேரத்தில் பெய்த மழை அதன் விளைச்சலை பாதித்துள்ளது.இதன் காரணமாகவே விலையில் வீழ்ச்சி ஏற்படவில்லை. ஒரு மூட்டை சராசரியாக ரூ.9,900 வரை விற்பனையானது.கடந்த, 5 நாட்களில் மட்டும் எள், மக்காச்சோளம், கம்பு என மொத்தம் 1,429 மெட்ரிக் டன் விளை பொருட்கள் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டன. இதன் மூலம் ரூ. 7.90 கோடி வர்த்தகமானது. வரும் நாட்களிலும் எள் வரத்து தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை