உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாலையில் மெகா சைஸ் பள்ளம்

சாலையில் மெகா சைஸ் பள்ளம்

சங்கராபுரம் : அரசம்பட்டு - பாலப்பட்டு சாலையில் உள்ள மெகா சைஸ் பள்ளத்தால் வா கன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமம் வழியாக கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த புதுப்பாலப்பட்டு, பழையப்பாலப்பட்டு, கள்ளிப்பட்டு, தும்பை, மாச்சேரி, மோட்டாம்பட்டி, துரூர் ஆகிய கிராமங்களுக்கு செல்ல முடியும். இதில் அரசம்பட்டு பஸ் நிலையம் அருகே சாலையில் ஒரு அடி ஆழத்திற்கு மெகா சைஸ் பள்ளம் உள்ளது. இரவு நேரத்தில் சாலை பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்தி ல் சிக்கி கொள்கின்றனர். பள்ளத்தை மூடி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை