மேலும் செய்திகள்
வணிகர் சங்க பேரவை ஆலோசனை கூட்டம்
03-May-2025
சங்கராபுரம்; சங்கராபுரத்தில் வணிகர் தின விழா நடந்தது.மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர்கள் நெடுஞ்செழியன், பால்ராஜ், சிவா, ரவி, மூர்த்தி முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் குசேலன் வரவேற்றார். தொழிலதிபர் ஜனார்தனன் சங்க கொடியேற்றினார்.ஆன் லைன் வர்த்தகத்தால் சில்லரை வியாபாரம் பாதிக்கப்படுவதை கண்டித்து மாவட்ட அளவில் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.பாண்டலம் வணிகர் சங்க தலைவர் செந்தில், செயலாளர் குமார், வேலு, விஜயகுமார், மருந்து வணிகர் சங்க தலைவர் நாச்சியப்பன், நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் சீனிவாசன், பாத்திர வணிகர் சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.துணைத் தலைவர் சவுந்தர்ராஜன் நன்றி கூறினார்.
03-May-2025