உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விருகாவூர் மாதிரி பள்ளியில் மதிய உணவு திட்டம் துவக்கம்

விருகாவூர் மாதிரி பள்ளியில் மதிய உணவு திட்டம் துவக்கம்

தியாகதுருகம்; தியாகதுருகம் அடுத்த விருகாவூர் அரசு மாதிரி பள்ளியில் மதிய உணவுத் திட்டம் துவக்க விழா நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (மதிய உணவுத் திட்டம்) மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், அட்மா குழு தலைவர் அண்ணாதுரை, பி.டி.ஓ., கொளஞ்சி வேல், ஊராட்சி தலைவர் சந்திரலேகா முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கந்தசாமி வரவேற்றார். ஒன்றிய சேர்மன் தாமோதரன் மதிய உணவுத் திட்டத்தை துவக்கி வைத்தார். பள்ளியில் படிக்கும் 522 மாணவர்களில் 367 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. ஒன்றிய பொறியாளர் வசந்தி துணை பி.டி.ஓ., கோவிந்தசாமி, மாவட்ட கவுன்சிலர் பழனியம்மாள், ஒன்றிய கவுன்சிலர் அய்யாசாமி, துணைத்தலைவர் அலமேலு, எத்திராஜ், கலியன், பழனிசாமி கோவிந்தராஜ் சையத் முகமது பாஷா கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை