இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு அமைச்சர் பரிசுத்தொகை, கோப்பை வழங்கல்
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் தி.மு.க., சார்பில் நடந்த இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பையை அமைச்சர் வழங்கினார்.கள்ளக்குறிச்சியில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி தி.மு.க., சார்பில் இரட்டையர் பிரிவு இறகுப்பந்து போட்டி நடந்தது. இப்போட்டியில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சங்கராபுரம், திருக்கோவிலுார், கச்சிராயபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்று, முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், எம்.பி., மலையரசன் முன்னிலை வகித்தனர். போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த உதயா, கவினாஸ் அணிக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் கோப்பையை அமைச்சர் கணேசன் வழங்கி கவுரவித்தார்.அதேபோல், இரண்டாமிடம் பிடித்த மகேந்திரன், கார்த்திக் அணிக்கு ரூ.8 ஆயிரமும், மூன்றாமிடம் பிடித்த முகில், ஹரிஷ் அணிக்கு ரூ.6 ஆயிரமும், நான்காமிடம் பிடித்த செந்தில், ஆனந்த் அணிக்கு ரூ.4 ஆயிரம் பரிசுத்தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கண்ணதாசன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.