உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுபான்மையினர் ஆணையம் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

சிறுபான்மையினர் ஆணையம் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

கள்ளக்குறிச்சி, ; சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மலையரசன் எம்.பி., முன்னிலை வகித்தார்.சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவர் இறையன்பன் குத்துாஸ் போட்டியை துவக்கி வைத்து பேசினார். இதில் ஒன்றே குலம் ஒருவனே தேவன், மனிதநேயம் ஓங்கட்டும், ஏன் வேண்டும் இடஒதுக்கீடு, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், விடுதலை போரில் தமிழர்களின் பங்கு போன்ற பல்வேறு தலைப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச்சு போட்டி நடந்தது. போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு கல்லுாரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். முதல் 3 இடங்களைப் பிடிக்கும் 6 பேருக்கு பரிசுத் தொகை வழங்கப்படுவதுடன், மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதா, ஆர்.கே.எஸ்., கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை