காணாமல் போன மூதாட்டி: ஏரியில் சடலமாக மீட்பு
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த தகடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமாயி,55; மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 31ம் தேதி காலை 8:30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து அவரது மகன் ஏழுமலை, 35; திருப்பாலபந்தல் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் நேற்று திருப்பாலபந்தல் ஏரியில் ராமாயி சடலமாக மிதப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.